திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையுமா...?

வெந்தயம் சர்க்கரை நோயை மிக வேகமாக கட்டுக்குள் வைக்கிறது. இந்த வெந்தயத்தை சாப்பிடுகிற அனைவருக்குமே சர்க்கரை நோய் குறைகிறது அல்லது தீர்ந்து  விடுகிறது என்று சொல்லலாம்.


இந்த வெந்தயத்தை நாம் எப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோயை குறைக்கலாம் என்பதை பார்ப்போம்.
 
சாதாரணமாகவே சர்க்கரை நோய் வருபவர்களுக்கு அவர்களுடைய உடல்நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும். மிகவும் சோர்வுடன் காணப்படும். அடிக்கடி நாவறட்சி  ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
 
சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தாலே போதும். அவர்களுடைய சர்க்கரை நோய் விரைவில் கட்டுக்குள்  வந்துவிடும். 
 
தொடர்ந்து இதை நீங்கள் செய்து வரும் பொழுது உங்களுடைய உடலில் உள்ள சர்க்கரையின் அளவு மிக வேகமாக குறையும். அதுபோல முளைக்கட்டிய  வெந்தயத்தையும் நீங்கள் தினமும் காலையில் சாப்பிட்டு வரும்பொழுது சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.
 
ஏனென்றால் இந்த முளைக்கட்டிய வெந்தயத்தில் பாலிசக்கரைடு அதிகம் உள்ளது. இது அதிகமாக சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. இதனால் அதிகமாக  தவிர்க்கப்படும். அதோடு முளைகட்டிய வெந்தயத்தில் 75 சதவிகிதம் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது.
 
முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோயின் தீவிரம் குறைந்து விரைவில் கட்டுக்குள் வரும். ஆகையால் சர்க்கரை நோயை கண்டு பயப்படாமல் சித்த மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று வெந்தயத்தையும் குடித்து வாருங்கள். சர்க்கரை நோய் உங்கள் கட்டுக்குள் வரும்.