Daily Horoscope
✕

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் என்ன தெரியுமா...?

Written By Sasikala
Updated: புதன், 5 மே 2021 (09:51 IST)

ப்ராக்கோலி கால்சியம் சத்தினை அதிகம் கொண்டதாக உள்ளதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதாகவும், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட  பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது.
 
ப்ராக்கோலி புற்றுநோய் பாதுகாப்பு காரணியாக உள்ளது, இதன் தன்மையானது புற்றுநோயினை வராமல் பாதுகாப்பதாகவும் உள்ளது. ப்ராக்கோலி இரத்தத்தில் உள்ள  சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாக உள்ளது.
 
ப்ரோக்கோலி வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக் கீரையினைப் போல் ஞாபக சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் 8 மாதக் குழந்தை முதல் முதியோர்  வரை அனைவரும் இதனை வாரத்தில் 2 முறையாவது எடுத்துக் கொண்டால் நிச்சயம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.
 
எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு  எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட காரணமாகிறது.
 
ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல்  பாதுகாப்பதோடு. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.

எல்லாம் காட்டு

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments