ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தான்றிக்காயில் உள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...?

தான்றிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. செரிமானத்தைத் தூண்டும் அரிய மருந்தாகப் பயன்படுகிறது. தான்றிக்காயில் வைட்டமின் F அதிகமுள்ளதால் இருமல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் பெற்றது. 

தான்றிக்காயைச் சுட்டு மேல்தோலைப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாய்ச் சர்க்கரை கலந்து தினசரிக் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டுவரப் பல்வலி, ஈறு நோய்கள் போன்றவை குணமாகும்.
 
முடி வளர்ச்சிக்கு நன்முறையில் உதவும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வல்லது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சுத்தப்படுத்தும். வெந்நீர் கொண்டு அரைத்து புண்களின் மீது போட்டால், விரைவில் ஆறும்.
 
கடுக்காய், நெல்லிக்காயுடன் தான்றிக்காய் பொடி சேர்த்து பல் துலக்கி வந்தால், பல் இறுகி, ஈறுகளும் பலப்படும். இரவு ஒரு தேக்கரண்டி தான்றிக்காய் பொடியை சாப்பிட மலக்கட்டு தீரும். தொண்டையில் ஏற்படும் கமறல், வாய் துர்நாற்றத்தை போக்கும்.
 
தான்றிக்காயின் தோலை வறுத்துப் பொடித்துத் தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட ரத்த மூலம் நிற்கும். தான்றிக்காய் தோலை சேகரித்து சூரணம் செய்துகொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசரி சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.
 
அதிமதுரம், திப்பிலி மற்றும் தான்றிக்காய் சேர்த்து கசாயம் செய்து 60 மிலி வரை குடிக்க இருமல் மற்றும் செரிமான பிரச்சனை குணமாகும்.