1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 5 மே 2022 (17:46 IST)

முகத்தில் உள்ள சுருக்கங்களை காணாமல் போகசெய்யும் குறிப்புகள் !!

Skin Colour
முகச் சுருக்கம் நீங்க காய்ச்சாத பசும் பால் 50 மி.லி., எலுமிச்சம் பழச்சாறு 10 மி.லி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, இளம் சூடானநீரில் முகத்தை கழுவி, மென்மையான பருத்தியினாலான துண்டு வைத்து துடைத்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாகும்.


காரட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் தடவிகாய்ந்த பின் இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும். காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.

கரும்புள்ளி மறைய தக்காளி சாறு 50 மி.லி. எலுமிச்சசை பழச்சாறு - 10 மிலி கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரில் முகத்தைகழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால்கரும்புள்ளி மாறும்.

முகக் கருப்பு மறைய மஞ்சள் தூள் 10 கிராம் கோதுமை பவுடர் 10 கிராம் எடுத்து கலந்து பேஸ்ட் மாதிரி செய்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் முகம் கழுவினால் முகச்சுருக்கம் முகக் கருப்பு மாறும்.

முகம் பொலிவு பெற மகிழம் பூ பொடி 250 கிராம் கிச்சிலி கிழங்கு 125 கிராம் கஸ்தூரி மஞ்சள் 125 கிராம் கோரைக் கிழங்கு 150 கிராம் எடுத்து இடித்து அதனுடன் சந்தனத்தூள் 100 கிராம் சேர்த்து ஒன்றாக கலந்துதினமும் சிறிது எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி 1/2 மணிநேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் முகம் பொலிவு பெறும்.