வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

திராட்சை மிகவும் சுவையான மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. திராட்சையில் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை என மூன்று வகைகள் உள்ளன. இவை மூன்றுமே நம் உடலின் ஆரோகியதை மேம்படுத்தும்.

திராட்சையில் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள். குறிப்பாக வைட்டமின்கள் சி மற்றும் கே உள்ளது.
 
கருப்பு திராட்சை ஆபத்தான நோய்களான மார்பக புற்றுநோய் மற்றும் இதர வகை புற்றுநோய்களையும் எதிர்த்துப் போராடி, உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும். இதற்கு கருப்பு திராட்சையில் உள்ள அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். எனவே கருப்பு திராட்சையை தினமும் சாப்பிடுவது நல்லது.
 
உலர்ந்த பழங்களில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், இரத்தத்தில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதற்கும், தினமும் உலர் திராட்சை சாப்பிடலாம்.
 
கருப்பு திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், அது யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் மற்றும் இதய அமைப்பில் இருந்தும் அமிலங்களை வெளியேற்றும்.
 
சில சமயங்களில் உடலிற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் குறைவதால், பல் பலவீனமாதல், பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு போன்றவை ஏற்படுகின்றன. உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டால் மேற்கூறிய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.