ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முந்திரி பருப்பில் உள்ள நல்ல சத்துக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

தினமும் சிறிதளவு முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமானம் போன்ற ஜீரண மண்டல செயல்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. முந்திரிப்பருப்பில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

பொட்டாசியம், வைட்டமின் ஈ, பி 6 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றன.
 
முந்திரியில் உள்ள கொழுப்பில் 75 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள ஒலிக் அமிலம், இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோ-நிறைவுறா கொழுப்பு என்றும் அறியப்படுகிறது. முந்திரி பருப்பில் இரும்பு சத்து மற்றும் காப்பர் சத்துக்கள் இருக்கின்றன.
 
கட்டுப்பாட்டுடன் எடுத்துக்கொள்ளப்படும், முந்திரிப்பருப்பு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. முந்திரி மட்டுமல்ல, அனைத்துக் கொட்டைகளிலும் அதிக கலோரிகள் உள்ளன, அதனால்தான் அவற்றைக் கட்டுப்படுத்தப்பட்ட அளவுக்குச் சாப்பிட வேண்டும்.
 
உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு அவசியமான மக்னீசியம் முந்திரி பருப்பில் அதிகமாக இருக்கிறது. மேலும் முந்திரியில் அமினோ அமிலங்கள் இருக்கின்றன.
 
முந்திரி பருப்பு உணவில் நல்ல நார்ச்சத்து உள்ளது. இது உணவை சிறப்பாக ஜீரணிக்க உதவுகிறது. அதிகப்படியான நுகர்வு வீக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க குடல் வாயு உற்பத்தியை ஏற்படுத்தும்.
 
முந்திரி போன்ற கொட்டைகளை உட்கொள்வது பல செரிமானப் பிரச்சனை குறைவதோடு தொடர்புடையது. முந்திரியில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருக்கின்றன. மேலும் இதில் உடலுக்கு நன்மை தரும் நல்ல கொழுப்புக்கள் அடங்கி இருக்கின்றன.
 
முந்திரி இரும்பு சத்தை சரியாகப் பயன்படுத்த உதவுவதாகவும், உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதாகவும் அறியப்படுகிறது.