1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாத நாராயணா இலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் தெரியுமா...!!

வாத நாராயணா மரம் ஆதி நாராயணன், வாதமடக்கி, வாதரசு என்று வேறு பெயர்களிலும் விளங்கும் வாத நாராயணன் மரங்களின் இலைகள், பட்டை மற்றும் வேர்கள் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டவை. 

மலச்சிக்கலால் உடலில் சேரும் நச்சுவாயுவே, வாத பாதிப்புகளுக்கு முதல் காரணமாக இருக்கிறது. உடலில் மலச்சிக்கலை சரிசெய்தாலே, பெருமளவு வியாதிகள்  விலகிவிடும். மலச்சிக்கலைப் போக்கும், சிறந்த நிவாரணியாக விளங்குகிறது, வாத நாராயணன் இலைகள்.
 
வாத நாராயணா இலைகளை சாறெடுத்து, அதில் விளக்கெண்ணை, திரிகடுகு, வெண்கடுகு மற்றும் பூண்டு சேர்த்து நன்கு காய்ச்சி, இலைச்சாறு, எண்ணெய்யுடன் கலந்து திரண்டுவரும்போது, ஆறவைத்து, இந்த மருந்தை, இரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடிக்க, உடனே, வயிற்றுப்போக்கு ஏற்படும். மலச்சிக்கல் தீர்ந்து, கைகால்  வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, நரம்புத்தளர்ச்சி போன்ற வாத பாதிப்புகளும் தீரும்.
 
இளைப்பு, குளிர் ஜுரம் போன்றவையும் சரியாகும். இரத்த சர்க்கரை பாதிப்புகளும் தீரும். உடலில் தீராத வலிகளுக்கு, வாத நாராயணா இலைகளை நீரிலிட்டு  காய்ச்சி, இளஞ்சூட்டில், உடலில் வலி தோன்றிய இடங்களில் நீரை ஊற்றி, மென்மையாக மசாஜ் செய்துவர, வலிகள் உடனே, தீர்ந்துவிடும். வாயுப்பிடிப்புக்கும்  இந்தநீர் பயன்தரும்.
 
அதிக அலைச்சல் மற்றும் வேலைப்பளுவால் உடலில் ஏற்பட்ட வலிகளையும் தீர்க்கும். கைகால் குடைச்சல் போன்ற வாத பாதிப்புகளையும் விலக்கும். வாத நாராயணா துவையலைப்போல, அடை, தோசை போன்ற சிற்றுண்டி வகைகளில் வாத நாராயணா இலைகளை சேர்த்து, சாப்பிட, உடலிலுள்ள நச்சு வாயுக்கள்  வெளியேறி, உடல் வலிகள் தீர்ந்து, உடல் நலம் பெறும்.
 
வாத நாராயணா இலைகளை, நல்லெண்ணெய் விட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழைகள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி மற்றும்  இந்துப்பு சேர்த்து, அம்மியில் வைத்து துவையல்போல அரைத்து, மதிய உணவில் கலந்து சாப்பிட, மலம் இளகி, உடலில் தங்கிய நச்சு வாயுக்கள்  வயிற்றுப்போக்குடன் வெளியேறும். மேலும் மலச்சிக்கலைத் தீர்க்கும்.