புதன், 6 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

செரியாமை மற்றும் வயிற்றுவலிக்கு நிவாரணம் தரும் ஓமம்...!!

ஓமம் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும். வாயுவை அகற்றும், வெப்பம் உண்டாக்கும், உடலை பலமாக்கும்; உமிழ் நீரைப் பெருக்கும்.
ஓமத்தை உணவில் சேர்த்துக் கொண்டு வர அஜீரணம், வயிற்று உப்புசம், அதிசாரம், சீதபேதி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
ஓமம், சுக்கு, கடுக்காய்த் தோல் இவற்றைச் சம அளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, ½ தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வாயு உபாதை குணமாகும்.
 
ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி  களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.
 
ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசைபோலச் செய்து, வயிற்றின்மீது பற்றுப் போட வயிற்றுவலி குணமாகும்.
 
ஓமம், மிளகு, வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை  வேளைகளில் 10 நாட்களுக்கு, வேளைக்கு 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிக்கழிச்சல் ஆகியவை தீரும்.
1 லிட்டர் நீருக்கு 150 கிராம் ஓமம் என்கிற அளவில் சேர்த்து, வாலை வடித்தல் முறையில் கொதிக்க வைத்து உருவாக்கப்படுவது ஓமத்தீநீர் ஆகும். இந்த செய்முறையின் போது, ஓமத்தீநீரின் மீது படிந்து மிதக்கும் எண்ணெய்க்கு ஓமத்தைலம் என்கிற பெயர் உண்டு.
 
நாட்டு மருந்துக் கடைகளிலும் பிற இடங்களிலும் ஓமத்தீர் விற்பனைக்கு கிடைக்கும். இதை வாங்கி, 30 மி.லி. அளவு குடித்துவர, வயிற்றுப்பொருமல், செரியாமை, சீதக்கழிச்சல் ஆகியவை குணமாகும். 
 
ஓமம் செரியாமல் மலம் கழிவது, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வறட்டு இருமல், இரைப்பிருமல், இவைகளைக் குணமாக்கும். 
 
சிறுநீரைப் பிரிக்கும்; சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்; பசியைத் தூண்டும்; கல்லீரல், மண்ணீரலை உறுதியாக்கும்.