1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Cumin helps the internal organs of the body to function smoothly...!!

உடல் உள்உறுப்புகளை சீராக இயங்க உதவும் சீரகம்...!!

சீரகம்
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்கவைத்து ‘சீரகக்குடிநீர்’ தயார் செய்து வைத்துக்கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகிவர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றல் குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால்  வாயுத் தொல்லை நீங்கும்.
 
* சீரகத்தைஇஞ்சி, எலுமிச்சம்பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டுவர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
 
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு  ஏற்படாது தடுக்கும்.
 
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாகவைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில்  சேர்த்துக்கொள்வோம்.
 
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு வேளையாக  சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
About Writer
Sasikala