வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (15:33 IST)

உடலில் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை காக்கும் வெள்ளரிக்காய் !!

வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து அதிகம் வெளியேறுவதால் அதனை சமநிலை படுத்தி உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மிக முக்கியம்.


வெள்ளரிக்காய் உடலுக்கு தேவையான நீர் சத்தை வழங்குகிறது. சருமம் மற்றும் தலைமுடி எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.
மேலும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.

வெள்ளரிக்காய் சாப்பிட்டு வரும்போது, உடலுக்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் கிடைக்கப் பெற்று உடலில் நீர் சத்தை அதிகப்படுத்தி உடல் சூடு, உடல் வறட்சி, அதிக தாகம், பித்த நோய்கள் போன்றவற்றை தீர்க்கிறது.

வெள்ளரிக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்தவும், தீராத மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.

வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றினை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் முகக் கருமையை போக்கும்.

வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது, இரத்தத்தில் உள்ள கழிகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

வெள்ளரிக்காய் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டதால், சிறுநீரகத்தில் கழிவுகள், சிறுநீர் கடுப்பு போன்றவற்றை குணப்படுத்துகின்றது.