1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் காரணங்களும் அதனை போக்கும் வழிகளும்...!

வாய் துர்நாற்றம் என்பது ஒரு தற்காலிகமான அறிகுறி தான். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றினால் அது தானாகவே சரியாகி விடும். ஆனால் சில நேரங்களில் அது உள்ளே காணப்படும் சில பிரச்சினைகளை பற்றி நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் அது இருக்க கூடும்.
வயிற்றில் புண் இருந்தால் இந்த வாய் துர்நார்றம் ஏற்படுகின்றன. இதற்கு முதல் காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பது அவசியம். மோசமான ஜீரண சக்தியினால் பேக்டீரியாக்கள் உடலிலும் வாயிலும் பெருகிவிடும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படக் கூடும். 
 
காலையில் எழுந்ததும் பிரஷ் செய்வதற்கு முன்பு இரண்டு கரண்டி நல்லண்ணெய் வாயில் விட்டு மூன்று நிமிடம் வரை வாயை கழுவுங்கள். பின்பு அதனை துப்பிவிடுங்கள். வயிர்றுக்குள் எடுத்துக் கொள்ளவேடாம். பின்பு வழக்கம் போல் பிரஷ் செய்யுங்கல் இப்படி தொடர்ந்து ஒரு 10 நாட்கள் செய்து வந்தாலே போதும். 
 
கிராம்பு சிறிதளவு எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை காலை உணவு எடுத்துக் கொண்ட பின் விரல்களால் சிறிதளவு எடுத்து தேனில் மிக்ஸ் செய்து சாப்பிட்டு வரலாம். இதை ஒரு மூன்று நாட்கள் செய்தாலே போதுமானது வாய் நாற்றம் ஓடிவிடும். 
 
வாய் துர்நாற்றம் நீங்க அருமையான மூலிகை புதினா. புத்துணர்ச்சியான சில புதினா இலைகளை மென்று தின்று பாருங்கள். புதினா உங்களது வாயில் உள்ள  பேக்டீரியாவை அழிக்கிறது. அதன் இலைகளில் உள்ள பச்சையம் இயற்கையான மவுத் ஃப்ரெஷனராக வேலை செய்யும். இலைகளை மென்று தின்பதால் வாய்  துர்நாற்றம் அளிக்கும் பேக்டீரியா நீங்கி விடும். மற்றும் புதினாவின் நறுமணம் வாய்க்கு புத்துணர்ச்சியளிக்கும்.
 
டீ ட்ரீ ஆயில் வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும் பேக்டீரியாக்களை நீக்குவதில் பிரசித்தி பெற்றது. டீ ட்ரீ ஆயிலின் நற்குணமானது கிருமிகளை கொல்வதில் சிறப்புடன்  செயல்படுவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.
 
ஆன்டி பேக்டீரியல் குணங்கள் கொண்ட சோம்பு வாய் துர்நாற்றத்தை எதிர்க்க பயன்படும். அதனை வெறுமனே மென்றும் தின்னலாம் அல்லது உங்களது டீயிலும்  கலந்து பருகலாம்.