நாவல் பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள் என்ன...?

Sasikala|
நாவல் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் வைட்டமின் ஏ, சி உள்ளதால் கண்பார்வை திறனை அதிகரிக்கும்.
நாவல் பழம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுக் கோளாறுகளை சரி  செய்யும். நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும்.
 
பெண் மலட்டுத்தன்மை குணமாகும். சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும். மேலும் சிறுநீரகக்கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாவல் பழக் கொட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
 
நாவல்கொட்டை - பேதியை நிறுத்தும், ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். நாவல் மரப்பட்டை - ரத்த அழுத்தம், வாய்ப்புண், தொண்டைப்புண்  இவைகளைக் குணமாக்கும்.
 
இவற்றை தவிர்க்க வேண்டும்:
 
நாவல் பழத்துடன் சிறிதளவு உப்புச்சேர்த்து சாப்பிடுவது நல்லது. தினம் 20 பழம் சாப்பிடுவது நல்லது. நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழம் சாப்பிடும் போது பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். 
 
காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நாவல் பழத்தினாலுண்டாகும் தீங்கை முறிக்க,  நெல்லிக்காயை மென்று தின்று குளிர்ந்த நீர் குடிக்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :