செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அடிக்கடி பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....!

அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடையும்.
கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் இருக்காது. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் முழுமையாக நம்மை வந்து சேரும்.
 
கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள் உள்ளது. இவை நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது.
கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய் தாக்கி இருந்தால் குணமாக்கும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம் தீர்வு கிடைக்கும்.
 
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வாரம் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காமல் அருந்தி வந்தால் வாய் துர்நாற்றம் போய்விடும். மேலும் பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக கேரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள்  போய்விடும்.
 
கேரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது. தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர  வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.