1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்வது நல்லதா...?

நெய்யை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவி செய்கிறது.


நெய்யில் இருக்கும் ஆரோக்கியமான அமிலம்,  வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற பிற ஊட்டச்சத்துக்களும், நமது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.
 
நெய்யில் கொழுப்புகள் இருந்தாலும் சமையலுக்கு பயன்படுத்தும் பிற எண்ணெய்களை விட மிகச்குறைந்த அளவிலான கொழுப்பே இருக்கிறது.
 
தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
 
நெய் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை கண்ட நம் முன்னோர்கள் அதை உயர் தரமான உணவுபொருளாகவும் மற்றும் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.
 
தீக்காயம் பட்ட இடங்களில் தினமும் சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில்  தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.
 
உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு,  தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.