1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்ட மணத்தக்காளி கீரை !!

மணத்தக்காளி கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. இலை தண்டு காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்பட கூடியது. இந்தக் கீரை சற்று கசப்பு தன்மை கொண்டது அதனால் சிலர் இதை எடுத்துக் கொள்வதில்லை. 

மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகிவந்தால் நெடு நாட்களாக இருந்த வயிற்றுப்புண் சீக்கிரமாக ஆறிவிடும் குறைந்தது பத்து நாட்களாவது இதனை பருகவேண்டும். இந்த சமயத்தில் உணவுகளில் உப்பு புளி காரத்தை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்.
 
மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும். இதன் பச்சை இலைகளை சிறிது எடுத்து நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். 
 
ஜுரம், காய்ச்சல் போன்ற நோயினால் உடல் சூடு அதிகமாகி கை, கால்களில் வலி உண்டாகும். அதற்கு, மணத்தக்காளி செடியின் சில இலைகளை பறித்து, நன்றாக கசக்கி சாறாக்கி நெற்றியில் தடவினால் காய்ச்சல் குணமாகும். கை கால்களில் தடவினால் வலியை போக்கி குணம் கிடைக்கும்.
 
 வாரம் இரண்டு முறையாவது மணத்தக்காளி கீரையை உணவில் எடுத்துக் கொண்டால் கருப்பை பலம் பெரும். மேலும், கர்ப்பபையில் இருக்கும் நச்சு கிருமிகளை வெளியேற்றி கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.
 
ஆண்களின் உயிரணுக்கள் வலுவாக இருந்தால்தான் அவரகள் தந்தையாக முடியும். அதற்கு, மணத்தக்காளி கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நரம்புகளை வலுப்படுத்தி மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாத்து ஆண்களின் மலட்டுத்தன்மையை விரட்டுகிறது.