செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஐஸ் கட்டியை கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

முகப்பருவை போக்க ஐஸ் கட்டி, மிகவும் சிறந்தது. இது முகப்பரு ஏற்படுத்தும் வலியையும், முகப்பரு சிவந்து போவதையும், வீக்கமடைவதையும் தடுக்கும். மேலும் முகப்பருவால் ஏற்படும் காயங்களையும் குணமாக்கும்.

ஐஸ் கட்டி கொண்டு மசாஜ் செய்வதால் முக கருமை மட்டுமல்லாமல் மேலும் பல நன்மைகளை முகத்திற்கு தருகிறது. சிலருக்கு அதிகமாக முகம் வியர்க்கும். இதனால் போட கூடிய மேக்கப் சிறிது நேரத்திலே கலைந்து விடும். இதை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை மசாஜ்  செய்யுங்கள். அப்படி செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.
 
சிறிதளவு காய்ச்சாத பாலை ஃபிரீஸரில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகு முகத்தைக் கழுவிய பின்னர், இந்த ஐஸ் கட்டியால் முகத்தை ஸ்க்ரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி ஃபேஷியல் செய்ததுபோல பளபளப்பாக மாறும்.
 
சருமத்தில் அதிக எண்ணெய் பசையுள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது குறையும். மேலும் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.
 
ஒரு நாள் முழுவதும் வெயிலில் சென்று விட்டு வீட்டில் வரும் போது முகம் ஒருவழி ஆகி விடும். இதற்கு ஐஸ் க்யூப் பயன்படுத்தினாலே போதும். நீங்கள்  பயன்படுத்திய அந்த நேரமே முகம் பொலிவு பெறும்.