செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எண்ணற்ற பலன்களை தரக்கூடிய பிரதோஷ வழிபாடு !!

மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர நாளும் சிவராத்திரி நாளும் சிவபெருமானுக்கு மிக முக்கியமான தினங்களாகப் போற்றப்படுகின்றன.  வழிபடப்படுகின்றன. அதேபோல், திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். 

திங்கட்கிழமையன்று, திங்கள் எனப்படுகிற சந்திரனைச் சூடிய சிவபெருமானுக்கு உரிய, சிவனாரை தரிசிக்கக் கூடிய அற்புதமான நாளாக வழிபட்டு வருகிறார்கள்  சிவனடியார்கள்.
 
சிவ வழிபாட்டில் மிக முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது பிரதோஷம். அற்புதமான பிரதோஷ நன்னாளில், சிவன் கோயிலுக்குச் செல்வதும் நந்திதேவரையும்  சிவலிங்கத் திருமேனியையும் தரிசிப்பதும் புண்ணியத்தைத் தந்தருளும் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யப் பெருமக்கள்.
 
பிரதோஷ தரிசனம், நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவல்லது. முற்பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் போக்கவல்லது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷமும் மகத்துவம் வாய்ந்தவை. எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியவை.
 
பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்வோம். சிவது சிவனருளைப் பெறுவோம். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, சிவனாருக்கு வில்வம் சார்த்தி   வணங்குவோம். 
 
பிரதோஷ நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தையும் சிவலிங்கத் திருமேனிக்கு நடைபெறும்  அபிஷேகத்தையும் கண் குளிரத் தரிசிப்போம்.