திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:51 IST)

இயற்கையான முறையில் மூலிகை பற்பொடியின் நன்மைகள் !!

herbal tooth powder
சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம். வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும். அதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமல் காக்கும்.


லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுப்பாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும். திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல் கூச்சம் நீங்கும், பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாது.

கடுக்காய் பொடியால் பல் துலக்க ஈறு வலி, புண், ஈறிலிருந்து குருதி வடிதல் குணமாகும். கருவக்குச்சிகளை ஒடித்து, அப்படியே பல் துலக்கலாம். இது, ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைப் போக்கக்கூடியது. சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் ஆற்றல்கொண்டது.

ஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவர பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். பல்லை விளக்குகிறபொழுது விரலையே உபயோகிப்பதுதான் உன்னதமானது.

தேவையானவை: படிகாரம் - 60 கிராம், மிளகு -10 கிராம், சாம்பிராணி - 10 கிராம், இந்துப்பு - 10 கிராம், ஓமம் - 5 கிராம், கிராம்பு - 2.5 கிராம், வேப்பம்பட்டை - 10 கிராம். செய்முறை:  மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் பல் துலக்கப் பயன்படுத்தலாம்.

பலன்கள்: பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்சனைகளைத் தீர்க்கும். மேலும்  ஈறு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும். பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் ஆடுவது, சொத்தையாவது போன்ற பிரச்னைகள் தீரும்.