1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (17:50 IST)

நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா...?

Ghee
தினமும் அன்றாட உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்ப்பதால் வயிறு உப்பிசம் மற்றும் தொடர் ஏப்பம் அஜீரணக்கோளாறு போன்றவற்றை குணம் செய்கிறது. பசியின்மையை போக்கி பசியை தூண்டும் சக்தி நெய்க்கு உள்ளது.


எலும்பு தேய்மானத்தை குணம் படுத்தும் வல்லமை உள்ளது. வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றை சரி செய்ய நெய் பெரிதும் உதவும்.

நெயில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை நன்றாக இருக்கும். உடல் எடையை குறைக்கும் சக்தி நெய்க்கு உள்ளது. நெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் இ போன்றவை உள்ளது எது கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.

இதய நோய் உள்ளவர்கள் நெய்யை தினமும் சாப்பிட்டு வர இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தீக்காயம் ஏற்பட்டவர்கள் நெய் கொஞ்சம் காயத்தில் தடவி வர காயம் விரைவில் குணமாகும் மற்றும் எரிச்சல் இருக்காது. இருமல் உள்ளவர்கள் தினமும் நெய் சாப்பிட்டு வர இருமல் விரைவில் குணமாகும்.

நெய்யை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இந்த கில்லர் டி செல்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு வலுவடைந்து தொற்று நோய்கள், நுண்ணுயிர் தாக்குதல்கள் ஏற்படாமல் காக்கிறது.

குழந்தைகளுக்கு தினமும் உணவில் நெய் கலந்து கொடுத்து வந்தால் நினைவு திறனை அதிகரிக்கும் மற்றும் மூளைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நெயில் உள்ளதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும்.