திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்....!

பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. நார்த்தம் பழத்தை, காலையில் சாப்பிட்டு வந்தால்  பித்தம் தணியும்.  உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். 
இப்பழச்சாறை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். நார்த்தன் வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும்  எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகும். 
 
நார்த்தம் பழத்தின் தோல், வயிற்றுப்போக்கை நிறுத்தும். நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். 
 
ரத்தம் மாசடையும் போது, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும்.
 
வாயுத் தொல்லை அதிகரிக்கும்போது நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால், வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப்பொருமல் நீங்கும்.
 
உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
 
நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். வ‌யிற்றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்ணி‌ற்கு நா‌ர்த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.