முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்...!
பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.
தேங்காய் என்ணெய்யில் காயவைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.
தயிர் மற்றும் எலுமிச்சை பொடுகு தொல்லையை முற்றிலும் போக்குகிறது. அதனால் முடி உதிர்வதும் வெகுவாக குறைகிறது.
தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமான விளக்கெண்ணெய்யைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி முடியும் உதிராது.
தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும்போது, சீயக்காயத் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும்.
கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய்யும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும் அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை தீரும்.
ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம். ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம். கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுபவை.