வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பீட்ரூட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!

பீட்ரூட்டில் உள்ள பொருள்கள் தமனிச் சுவர்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.

பீட்ரூட்டில் பீட்டா சையனின், மற்றும் கரையக்கூடிய நார்ச்சட்த்துகள் அடங்கி உள்ளன. இவை செல்களுக்கு வலுவூட்டவும், இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்து நெஞ்சு வலி, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
 
பீட்ரூட்டில் போலிக் அமிலம் அதிகமாக உள்ளது. இவை கர்ப்பிணிகளுக்கு தேவையான முக்கிய சத்தாகும். இதை தவிர பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம்  உள்ளதால் இரத்த சோகை ஏற்படாது.
 
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடித்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. மேலும் களைப்பு மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல்  பாதுகாக்கிறது.
 
மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வாந்தி, பேதி போன்ற உணவு மண்டல கோளாறுகளுக்கு பீட்ரூட் பலன் தரும். பீட்ரூட் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் சாறு சேர்த்தால் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
 
பீட்ரூட், கேரட்டைப் போல் கண்பார்வைக்கு நல்லது. பீட்ரூட் கஷாயம் தோல் நோய்களை போக்கும். தீப்புண்களின் மேல் பீட்ரூட் சாற்றை தடவலாம். தீப்புண்கள்  ஆறும். தேன் கலந்த பீட்ரூட் சாறு அல்சருக்கு நல்லது.