செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (17:09 IST)

தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பலன்கள் !!

தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகளை வலிமையாக்கும். தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.


அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. ஒரு உலர் அத்திப்பழம் சாப்பிட்டால் அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தின் அளவில் 2 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

இரும்புசத்து உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு மிகவும் முக்கியமானது. தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால்,இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

தினமும் மூன்று உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டால் 5 கிராம் அளவு நார்ச்சத்து கிடைக்கிறது. தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் செரிமானத்தை மேம்படுத்தும், மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

தினமும் உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமத்தை அழகாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது. இளமையான சருமத்தை பெறலாம்.

தினமும் உலர் அத்திப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு அந்த பாலை பருகி வந்தால் உடல் பலம் பெரும், நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.