திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எளிதாக கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையில் உள்ள நன்மைகள் !!

முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் முருங்கைக்கீரை  உண்டால் நீங்கும்.

* முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் மற்றும் உடலில் உள்ள வலிகள் நீங்கும்.
 
* முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நல்ல ரத்தம் ஊறும். 
 
* பற்கள் பலப்படும், முடி நீண்டு வளரும், நரை முடி ஏற்படுவது குறையும் மற்றும் தோல் வியாதிகள் நீங்கும். மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு முருங்கைக்கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
* முருங்கைக்கீரையை வாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது உணவுடன் எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். முருங்கைக்கீரையை சூப்  போல செய்து சாப்பிட்டால் மூட்டு வலி பறந்து போய்விடும்.
 
* முருங்கை கீரையை கொண்டு தயாரிக்கப்படும் உணவுவானது தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கைக்கீரை சூப்பானது ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு நல்லது.
 
* முருங்கைகீரையானது ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை போக்கும் வல்லமை வாய்ந்தது மேலும் இரத்த விருத்திக்கும் நல்ல உணவு.