திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற மண்பாத்திர சமையலின் நன்மைகள்....!!

மண்பானைகளில் சமைக்கும்\ போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.


மேலும்  மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. 
 
மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால்  உணவில் உள்ள  சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.
 
மண்பாத்திரத்துல சமைப்பதால் உணவு விரைவில் கெட்டுப் போகாது. குறிப்பாக மண்பானையில் செய்கின்ற மீன் குழம்புக்கு ஈடு இணை கிடையாது. ஒரு வாரம்கூட  கெட்டுப்போகாமல் இருக்கும். மத்த பாத்திரங்களில் வைக்கின்ற உணவுப் பொருள்கள், வெயியில் நீர்த்துப் போயிரும். ஆனா, மண்பானையோட தன்மையால் அது  நீர்த்துப் போகாது.
 
மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும்போது, மண்பானை  தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.  
 
மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும்.  இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
 
மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மலச்சிக்கல்  வராமல் தடுக்க உதவும். குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும்.  இப்படி மண்பானையின் மகத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். 
 
மற்ற பாத்திரங்களைவிட சீரான வெப்பநிலையை அதிக நேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.  மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்.