ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (12:19 IST)

நெல்லிக்கனி சாறு தொடர்ந்து அருந்திவர கிடைக்கும் நன்மைகள் !!

Gooseberry juice
பழங்களில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து எளிதில் அழியக்கூடியது. காற்றாலும் வெப்பத்தாலும் கரையக்கூடியது. இவை உலர்ந்து போகும் போது வைட்டமின் ‘சி’ அழிந்துவிடும்.


சிறுநீர் எரிச்சல், ஆகார வாய் எரிச்சல், சிறுநீர் அழற்சி, சர்க்கரை நோய், வயிறு எரிச்சல் போன்றவற்றை அவரவர் உடல்நிலைக்கேற்ப குணமாக்கும், தாகத்தை தணிக்கும்.

நெல்லியிலிருந்து தைலம் எடுத்து தலைக்குத் தடவிவர தலையின் உறுப்புகளான கண், காது, மூக்கு ஆகியவற்றிற்கும் மூளை, நரம்பு மண்டலங்கள் ஆகியவற்றிற்கும் குளிர்ச்சி தரும்.

நெல்லியுடன் சுத்தமான தேன், ரோஜா இதழ்கள் போட்டு தயாரிக்கப்படும் கலவை ‘குல்கந்து’ எனப்படும். இதை கர்ப்பிணிப்பெண்கள் சாப்பிட்டு வர குழந்தை நல்ல நிறத்தல் பிறக்கும்.

வாய்ப்புண், தொண்டைப் புண்களுக்கு நெல்லிக்கனி அருமருந்தாக வேலை செய்கிறது. தொடர்ந்து வரும் சளி தும்மலுக்கு நெல்லிக்கனி சாறு தொடர்ந்து அருந்திவர படிப்படியாக சளித்தொல்லை குறையும்.

இதய பலவீனம், உயர் இரத்த அழுத்தத்திற்கும், மாரடைப்பு வந்தவகள் நெல்லியை தைரியமாக தினமும் ஒன்று வீதம் சாப்பிடலாம். பசியின்மை, வயிறு, குடல் புண்கள், தோல் நோய்கள், சொரி, புண்கள், மேகவெட்டை, நீரிழிவு, நீர்ச்சுருக்கு போன்றவற்றிற்கு நெல்லிக்காய் மிகவும் நல்லது.

நெல்லிமரத்தின் பட்டையை தேனில் குழைத்துக் கொடுத்தால் வாய்ப்புண் குணமாகும். நெல்லிமரத்தின் வேரை பயன்படுத்தினால் வாந்தி மலச்சிக்கல் குணமாகும். பச்சை வேர்ப்பட்டைச் சாற்றினொடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் பிறமேகம் போகும். குன்மம் இருமல் முதலியவற்றைப் போக்க வேர்க்கஷாயம் சிறந்தது. வேரை உலர்த்தி இடித்து சூரணித்து அத்துடன் மேல் தோல் போக்கிய எள்ளையும் சேர்த்து சாப்பிட மூளையின் நரம்புகளுக்குப் பலம் உண்டாக்கி ஞாபக சக்தி அதிகரிக்கும்.