வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?

தலைமுடியில் ஏற்படும் சில பிரச்னைகள் நிமித்தம் சில நேரங்களில் மனம் உடைந்து போகிறோம். தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

தலைமுடியில் உள்ள அழுக்குகளைப் போக்க ஷாம்பு சிறந்ததாக இருந்தாலும் தலைமுடி நல்ல ஊட்டச்சத்துடன் மென்மையாக வளர கண்டிஷனர் உதவுகிறது. 
 
சில நேரங்களில் உங்கள் ஸ்கால்ப்பில் செதில்செதிலாக தோல் உதிரும். உண்மையில் தலையில் செதில்செதிலாக இருந்தால் அது தலையில் அழுக்கு  அதிகமாகவும் குறைவான ஈரப்பதமும் இருப்பதை உணர்த்துகிறது.
 
அடுத்ததாக தலைமுடி நரைப்பதற்கு காரணம் தலைமுடி அதன் நிறத்தை உருவாக்கும் திறனை இழக்கும் போது நரைமுடி வரத் தொடங்குகிறது. மன அழுத்தம் இதற்கு காரணமல்ல. மன அழுத்தம் தலைமுடி உதிர்வை ஏற்படுத்தும் ஆனால் தலைமுடியின் நிறத்தை மாற்றாது.
 
நாம் தொடர்ச்சியாக தலைமுடியில் சூடான கருவிகள் அல்லது கனமான ஹேர் ஸ்டைலர்களைப் பயன்படுத்தினால் முடியின் பாதுகாப்பு லேயர் விலகிவிடும். இதற்கு தலைக்கு குளிக்கும் முன் தலைமுடிக்கு எண்ணெய்யை வைத்து குளித்த பின் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தினால் சரியாகும். மேலும் முடி வெடிப்புகளுக்கு சிறந்த தீர்வு பிளவடைந்த முடியை வெட்டினாலே போதும்.
 
ட்ரை ஷாம்பு தலையில் அதிகமாக இருக்கும் எண்ணெய்யை உறிஞ்சுகிறது மற்றும் முடிக்கு உலர்ந்த தோற்றத்தை தருகிறது. ஆனால் எப்போதுமே இந்த ஷாம்பு நல்லதல்ல. சில நேரங்களில் தலையில் அழுக்குகளை வேகமாக சேரச் செய்யும்.
 
தலைமுடி உதிர்வுக்கும் நாம் பயன்படுத்தும் ஹேர் ஜெல்லிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஏனென்றால் தலைமுடிக்கு ஹேர் ஜெல்லைப் பயன்படுத்தும் போது  அது முடியை காயவைத்து மேன்மைப்படுத்துகிறது. எந்த விதத்திலும் முடி உதிர வாய்ப்பில்லை.