திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

வெள்ளை வெங்காயம், குடல் பாக்டீரியா பன்முகத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இது ஒரு ப்ரிபயாடிக்காக செயல்படுகிறது.


நம் வயிற்றுக்கு நல்லது செய்யும் ஸ்டார்ச் தன்மை இதில் உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
 
செரிமான கோளாறு மற்றும் நச்சுத்தன்மை மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல சுகாதார பிரச்சனைகளைத் தடுக்கிறது. வெள்ளை வெங்காயத்தில் உள்ள செலினியம்,  நோய் எதிர்ப்பு சக்தியை நிர்வகிக்க கூடிய சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
 
இதயம் தொடர்பான பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக வெள்ளை வெங்காயம் இருக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை வெள்ளை வெங்காயம் மேம்படுத்துகிறது. எப்போதும் உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வருவது இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனையில் இருந்து  காக்கிறது.
 
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி, அடிக்கடி மயக்கம் வருவது, தொடர் உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு  தீர்வாக அமையும்.
 
வெள்ளை வெங்காயத்தில் இயற்கையாக இருக்கும் சில வேதிப்பொருட்கள் நம் மனநிலையை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடிய தன்மை உடையது. எனவே தினமும்  வெள்ளை வெங்காயத்தை சாப்பிடும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது அதிக நன்மைகளை தரும்.
 
முக்கியமாக கொதிக்கும் வெயில் காலத்தில் வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வது உடலை குளிர்விக்கவும், இரவு நேர வியர்வையை தவிர்க்கவும்  உதவுகிறது.