பசலை கீரையை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் பயன்கள்....!!
பசலைக் கீரையில் வளமான அளவில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.
பசலைக்கீரையில் வைட்ட மின் ஏ, கே மற்றும் ஈ அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகளான சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
மலச்சிக்கலில் இருந்து விடுதலை: தினமும் ஒரு கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந் துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும்.
புற்றுநோயை எதிர்க்கும்: பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு என்னும் அத்தியாவசிய பைட்டோ நிïட்ரி யண்ட்டுகள் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலி யைக்குணப்படுத்தும்.
ரத்த சோகை: பசலைக்கீரையில் இரும்புச்சத்து வளமாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண் டால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரித்து, ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.