திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அன்றாட உணவில் பசலைக்கீரையை சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்....!

இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. குறைந்த கலோரி பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால்,  நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.
ரத்த அழுத்தம் குறையும்: பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந் துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும்.
 
பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு என்னும் அத்தியாவசிய பைட்டோ நிïட்ரி யண்ட்டுகள் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
 
இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆரோக்கியமான இதயம்:  ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக  வைத்துக்கொள்ள  முடியும்.
பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண் டவை. ஆகவே தினமும் இதனை  உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.
 
பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு  அளிக்கும்.
 
மூளை, நரம்பு மண்டலம்: பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.
 
மூட்டு வலியில் இருந்து விடுதலை: மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை  அதிகம்  உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக்குணப்படுத்தும்.