வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!

மணத்தக்காளி கீரை வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதனை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது செரிமானத்தை தூண்டி உடலை சுறுசுறுப்புடன்  இயக்குவதோடு, உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது.

மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.
 
வாய் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி கீரை ரசம் செய்யலாம். தேவையான பொருட்கள்: நெய், கடுகு, சீரகம், வரமிளகாய், வெங்காயம், மணத்தக்காளி கீரை, அரிசி கழுவிய நீர்.வானலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்க்கவும். பின் சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் மணத்தக்காளி கீரை மற்றும் அரிசி கழுவிய நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
 
மணத்தக்காளி செடியின் இலைகள் சிலவற்றை பறித்து, அந்த இலைகளை நன்றாக கசக்கி சாறு எடுத்து, அந்த சாற்றை காய்ச்சலை போக்க நெற்றியிலும், கை கால்களில் ஏற்படும் வலியை போக்க கை, கால்களிலும் நன்கு தேய்த்து வந்தால் குணம் கிடைக்கும்.
 
மணத்தக்காளி கீரைக்கு நுண்கிருமிகளை வேரறுக்கக் கூடிய தன்மையும், நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையும் உள்ளது. இதன் காய்களை வற்றலாக செய்து  சாப்பிடுவது மூலமாகவும் உடலுக்கு நன்மை கிடைக்கிறது.
 
மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி  உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.