திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (14:02 IST)

சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரும் வாழைப்பழம் !!

Sensitive Skin
வாழைப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. இது சரும சுருக்கங்களை தவிர்க்க பயன்படுகிறது. மேலும் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.


சருமம் ஜொலிக்க வாழைப்பழத்துடன் சிறிது கெட்டி தயிர் மற்றும் தேன், ஓட்ஸ் மாவு இவைகள் அனைத்தையும் கலந்து நாம் குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு இதை உடம்பு, கை, கால், அதேபோல கழுத்து பகுதிகளில் தடவி குளித்தால் சருமம் சிவப்பாகும்.

ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து பிசைந்து கொள்ளவும். பிறகு முகத்தில் கண்களைத் தவிர பிற பகுதிகளில் நேரடியாக தடவவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்.

பழுத்த வாழைப் பழம் ஒன்றை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து முகத்தில் கருமை படிந்த இடத்தில் தடவுங்கள். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

நன்கு பழுத்த வாழைப் பழத்தை பிசைந்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதால் தோலின் கருமை மற்றும் கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் நீங்கும்.