வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (10:04 IST)

இரத்த சோகை பிரச்சனையை விரைவாக தீர்க்கும் வாழைப்பூ !!

இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்த சோகை குறைபாடு ஏற்படுகிறது. வாரம் ஒரு முறை வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.


வாழைப்பூவை வேகவைத்து பொரியல் செய்து சாப்பிடுவது நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைப்போகிளைசீமிக் எனும் வேதிப்பொருள், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண்கள் ஆகியவை குணமாக வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளை சீரமைக்கும்.

வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. வாரம் ஒருமுறை அல்லது இருமுறை வாழைப்பூ சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்காளாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றிற்கு வாழைப்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் மலச்சிக்கல் பிரச்னையை போக்கி, மூலம் காரணமாக ஏற்பட்ட புண்களை வெகு விரைவில் ஆற்றுகிறது.

பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக வாழைப்பூ உள்ளது. மேலும் வாய் துர்நாற்றம் நீங்கவும், வாய் புண்கள் ஆறவும், வாழைப்பூவை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வரலாம்.