இயற்கையில் கிடைக்கும் மூலிகை பொடிகளும் அதன் பயன்களும்...!
இந்தியாவில் மலைப்பகதிகளில் மூலிகைத் தாவரங்கள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் குறிப்பாக, கிராமப்புறங்களில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகை வகைச் செடிகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வெள்ளருக்கு பொடி: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
நன்னாரி பொடி: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நாவறட்சிக்கு சிறந்தது.
நெருஞ்சில் பொடி: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவ சாமான் பொடி: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பொடி: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
பூலாங்கிழங்கு பொடி: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
வசம்பு பொடி: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்று கற்றாலை பொடி: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
மருதாணி பொடி: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
கருவேலம்பட்டை பொடி: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.