1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By
Last Updated : செவ்வாய், 1 மே 2018 (16:33 IST)

ஓட்கா குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

ரஷ்யாதான் உலகிற்கு ஓட்காவை அறிமுகப்படுத்தியது. ரஷ்ய மொழியில் ஓட்கா என்றால், தூய்மையான தண்ணீர் என்று பொருள்.  கம்பு, கோதுமை, உருளை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பிலிருந்து தயாரிப்பதே ஓட்கா. இந்த ஓட்காவில் உள்ள நன்மைகளை தெரிந்துக்கொள்வோம்.
 
# ஓட்கா ஆரம்பத்தில் மருத்துவத்துக்கே, அதிகம் பயன்பட்டது. சமீபத்தில் பழங்கள், இஞ்சி, இலவங்கம், வெண்ணிலா போன்ற பல நறுமணங்கள் ஓட்காவில் சேர்க்கப்படுகின்றன.
 
# ஓட்காவில், 38-40 சதவீதம் வரை, ஆல்கஹால் உள்ளது. எனவே, இதை குறைவாக குடித்தால், உடலுக்கு நன்மை தரும்.
 
# ஓட்கா ஒரு சிறந்த கிருமிநாசினி. உடல்நலனுக்கும், சரும பொலிவிற்கு, மனவளத்திற்கு நன்மைகள் செய்யும்.
 
# பல்வலி வந்தால், பஞ்சில் சிறிது ஓட்காவை நனைத்து, பல் ஈறுகளில் வைத்து வர, பல்வலி உடனே மறையும்.
 
# ஓட்கா முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி, முக தசைகளை சுருக்கி, முகத்தை மிருதுவாக்கும். 
 
# தர்பூசணிசாற்றை, ஓட்கா கலந்தநீரில் இட்டு, முகத்தில் தடவிவர, முகம் பொலிவாகும். 
 
# ஓட்கா இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தநாள அடைப்புகள், சுருக்கத்தை நீக்கி, இதயத்தை வலுவாக்கும். 
 
# உடலில் நல்ல கொழுப்புகளை உண்டாக்கி, நச்சு கொழுப்புகளை கரைப்பதால், உடல் எடைக்குறைப்பில், ஓட்கா முக்கிய பங்கு வகிக்கிறது.