திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பூண்டு பாலில் இத்தனை அற்புத மருத்துவ குணங்களா...?

பாலில் பூண்டை வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து குடித்து வருவதால் ஏற்படும் பல்வேறு  நன்மைகளை பார்க்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
 
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வுத் தொல்லை மற்றும் கால்வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
 
இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
 
சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
 
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய், நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக பூண்டு பால் செயல்படுகிறது.
 
நுரையீரல் அழற்சி உள்ளவர்கள், பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், நுரையீரல் அழற்சி பிரச்சனை விரைவில் குணமாகும்.
 
செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடையச் செய்ய பூண்டு பால் உதவுகிறது.