1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பிளாக் டீ குடிப்பதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா...?

பிளாக் டீ என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு வகை தேநீர் ஆகும். இதில் உள்ள வலுவான ஆக்ஸிஜனேற்றிகள் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. 

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் எடை இழப்பைக் கட்டுப்படுத்த பிளாக் டீ உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
 
பிளாக் டீ குடலில் உள்ள நுண்ணுயிரியின் உதவியுடன், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பிற்கும் பங்களிக்கும் என ஐரோப்பியாவின் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் உள்ளுறுப்புகளில் தேங்கும் கொழுப்புகளைத் தடுக்க உதவுகிறது.
 
பிளாக் டீயில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு கோப்பை பிளாக் டீயில் 2 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளன. பிளாக் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். மேலும் பெல்லி பேட் எனப்படும் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறையும்.
 
பிளாக் டீயில் காபினின் அளவு அதிகம் இருப்பதால் இதனை அதிகமாக குடித்தால் நீரிழப்பை உண்டாக்கும். நீரிழப்பு அதிகமாகும் போது உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதே போல பிளாக் டீயில் டானின்கள் எனப்படும் இயற்கை பொருட்கள் உள்ளன. இதனை மிதமான அளவுகளில் எடுத்துக்கொண்டால் எந்த தீங்கும் ஏற்படாது. அதிகமாக எடுத்துக்கொண்டால் குமட்டல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும்.