புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சப்பாத்தி கள்ளி பழத்தை சாப்பிடுவதால் இத்தனை பயன்களா...?

சப்பாத்தி கள்ளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.
 
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்.
 
ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.
 
சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது. மேலும் சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.
 
சித்த மருத்துவத்தில் இதனை டீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது. கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.