1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Apple boosts the body's immune system !!

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆப்பிள் !!

ஆரோக்கியம்
ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.
 
ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
 
ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி  அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.
 
ஆப்பிள் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. 
 
மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும் வல்லாரை !!