1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Amazing Tips to Increase Hair Thickness !!

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும் அற்புத குறிப்புகள் !!

தலைமுடி அடர்த்தி
நெல்லிக்காயில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. எனவே அந்த நெல்லிக்காய் பொடியை நீர் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி வந்தால், தலைமுடியின் அடர்த்தி அதிகிரிக்கும்.

உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை வாரத்திற்கு 2-3 முறை தலையில் தடவி ஊற வைத்து அலசி வர, தலைமுடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு, முடி சம்பந்தமான பிரச்சனைகளும் அகலும்.
 
விளக்கெண்ணெய்யும் ஓர் அற்புதமான தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் பொருள். இதற்கு இதில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் தான் காரணம். இந்த அமிலங்கள் பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, நல்ல பாதுகாப்பையும் வழங்கி, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியையும் கூட்டும்.
 
தேங்காய் எண்ணெய்யில் 2 அத்தியாவசிய அமிலங்களான லாரிக் மற்றும் கேப்ரிக் அமிலங்கள் உள்ளது. இவை பாதிக்கப்பட் தலைமுடியை சரிசெய்யவும், பலவீனமான தலைமுடியை வலிமையாக்கவும், முடியின் அடர்த்தியை மேம்படுத்தவும் உதவும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி வாரம் 2 முறை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.
 
கற்றாழை ஜெல் அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும். தலைமுடி மெலிவதற்கு போதிய ஈரப்பசை இல்லாமையும், ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் தான் காரணம். ஆனால் கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு 3 முறை தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து அலசினால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
 
கறிவேப்பிலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், தலையில் இருக்கும் பொடுகு நீங்குவதோடு, முடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் அதிகம் உள்ள முருங்கைக்காய் !!