வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (18:58 IST)

ஆடு தீண்டாப்பாளை மூலிகையின் அற்புத மருத்துவகுணங்கள் !!

ஆடு தீண்டாப்பாளை மூலிகை இது பூண்டு இனத்தை சார்ந்தது. இலைகள் மாற்று அடுக்கில் முட்டை வடிவில் சாம்பல் நிறத்தைக் கொண்டது. தரையோடு படர்ந்து வளரும். முதிர்ந்த நிலையில் காய்கள் வெடித்து சிதறும்.


ஆடு தீண்டாப்பாளை இலைகள் கொஞ்சம் எடுத்து கால் லிட்டர் சுடு தண்ணீரில் 2 மணி நேரம் ஊறப்போட்டு 2 மணி நேரம் கழித்து வடிகட்டி 50 மில்லி அளவு தினந்தோறும் காலையில் மட்டும் குடித்து வந்தால் பூச்சிக் கடி, கருமை நிறப்படை, கிரந்தி விஷம், கனைச்சுடு, குடலில் தொல்லைப் படுத்தும் புழுக்கல், தலைமுடி உதிர்தல், சிலந்தி கடி, வாத நோய்கள் குணமாகும்.

வேந்நீரில் ஊறவைத்த இலையின் ஊறல் குடிநீரை 15-30 மி.லி கொடுத்து வந்தால் கரும்படை, கரப்பான், தலை முடி உதிர்தல், கிரந்தி, வாதநோய்கள் போன்றவை தீரும்.

உலர்ந்த இலையை ஊறல் குடிநீர் செய்து கொடுத்தால் நுண்புழுக்கள் செத்து மலத்துடன் வெளியாகும்.

வயிற்றுப் புழுக்கள் குணமாக ஆடு தீண்டாப்பாளை இலைச்சூரணம் கால் தேக்கரண்டி அளவு வெந்நீருடன் கலந்து இரவில் குடிக்க வேண்டும் அல்லது ஆடு தீண்டாப்பாளை விதைச் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெய்யில் கலந்து இரவில் சாப்பிட வேண்டும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் மோர் சாதம் சாப்பிட்டு பேதியைக் கட்டுப்படுத்தலாம்.

வேர் சூரணம் 1 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனையை தீர்த்து சுகப் பிரசவத்தை உண்டாக்கும்.

இலையை காயவைத்து இடித்து சூரணமாக செய்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.