கொய்யா இலை தேநீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத பலன்கள்...!!

Guava leaves
Sasikala|
கொய்யாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள் கட்டி வளர்ச்சிகளை தடுக்கிறது. இது பெருங்குடல், மார்பகம், வாய், சருமம், வயிறு, வாய் குழி மற்றும் நுரையீரல் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும். 
கொய்யா உணவில் கொழுப்பு இல்லாததால் பெருங்குடலை நச்சு தன்மையிலிருந்து பாதுகாக்கிறது.
 
கொய்யா இலை தேநீர் ஆல்பா நொதி செயல்பாட்டை குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. கொய்யா இலை தேநீர் குடித்த 12 வாரங்களில் இன்சுலின் உற்பத்தியை குறைத்து இரத்த சர்க்கரை அளவையும் உடல் எடையையும் குறைக்கிறது.
 
கொய்யா இலை தேனீர் அல்லது கொய்யா சாற்றை அருந்தினால் செரிமான நொதி உற்பத்தியை அதிகரித்து உணவு நச்சை குறைக்கிறது.
 
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம்  பெறும்.
Guava leaves 1
கொய்யா இலையில் உள்ள வைட்டமின் சி முகப்பரு உருவாவதை தடுக்கிறது. கொய்யாவில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை சரிசெய்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :