வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (17:00 IST)

பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட கற்றாழை !!

Aloe vera
கற்றாழை கத்தளை, சோற்றுக் கற்றாழை, சிறுகத்தளை, குமாரி, கன்னி என பல பெயர்களில் அழைக்கபடுகிறது. கற்றாழையின்  இலை, வேர் ஆகியவை மருத்துவ குணமுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை என பல வகைகள் உள்ளன.

தலைமுடி பராமரிப்பில் முடிகளுக்கு கறுப்பிடவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் பேன் மற்றும் பொடுகு பிரச்சனைகளை நீக்குகிறது.

கற்றாழை சோற்றை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் எண்ணெய் குளியல் செய்து வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும் மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

சோற்றுக் கற்றாழையானது சீறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெய்யுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் பளபளப்பாகும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.