சருமம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் குணமாக்கும் கற்றாழை !!

வியாழன், 21 ஜூலை 2022 (06:38 IST)
சிறிதளவு கற்றாழை ஜெல்லை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிறு, குடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.


கருவளையங்களைப் போக்க நினைப்பவர்கள் தினமும் இரவு படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி தடவி, மறுநாள் காலையில் கழுவி வந்தால், விரைவில் கருவளையங்கள் மறையும்.

கற்றாழையில் வைட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளது. மேலும் கற்றாழை ஜெல்லானது சருமத்தில் கொலாஜன் செல் உற்பத்தியை அதிகரிக்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் இளமை தோற்றத்துடன் காணப்படும்.

கற்றாழை ஜெல்லை கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் குறைந்துவிடும்.

கற்றாழை ஜெல்லை தினமும் காலை மற்றும் மாலையில் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.

எல்லாம் காட்டு

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

அடுத்த கட்டுரையில்
Show comments