Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பாதாம் !!

Written By Sasikala
Updated: திங்கள், 28 செப்டம்பர் 2020 (11:22 IST)

இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டஸியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
 
பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
 
சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி  செய்யலாம்.
 
பாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. மங்கானிஸ், தாமிரம் மற்றும் ரிபோபிளாவின் சக்தியை உற்பத்திக்கு உதவுவதால் பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பர்.
 
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும். பாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பாதாமை உணவாகக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.

எல்லாம் காட்டு

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments