வேப்பம் பூ உடலில் உள்ள கொட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம்.
அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலால் அவதிபடுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
வாயில் ஏற்படக்கூடிய பற்சிதைவு, மூச்சு பிரச்னை, புண், ஈறுகளில் ரத்தம் போன்றவற்றை வேம்பு கொண்டு சரி செய்திடலாம். பாலிசாக்கரைடுகளை அதிகம் கொண்டுள்ள வேம்பு புற்றுநோய் கட்டிகள், லிம்ஃபோசைடிக் லுகேமியாவை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும். பாலிசாக்கரைடுகளை, கேட்டச்சின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளின் வலி நிவாரணிகளுக்கு வேம்பு பயனுள்ளதாக இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
கொஞ்சம் வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகை வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்தோடு வந்துவிடும்.
பெரியவர்கள் அதிகாலையில் வேப்பங் கொழுந்தை சிறிது பறித்து சாப்பிட்டு வர வயிறு சம்மந்தமான பிரச்னைகள் தீரும்.
3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும்.
வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.