செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் நிறைந்த வேப்பிலை!!

வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பிரச்சினைகள் இயற்கையான தீர்வாக அமையும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடம்பில் உள்ள சர்க்கரையின்  அளவை கட்டுப்படுத்தும்.
வேப்பிலை எண்ணெய்யை தலை முடியில் மசாஜ் செய்து ப்பின்பு 15 நிமிசங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் கூந்தல்  அடர்த்தியாக வளரும். தலையில் அரிப்பு அதிகமாக இருந்தால் அதற்கு வேப்பிலை நீரை கொண்டு தலையை அலசுவதால் அரிப்பு நீங்கும்.
 
வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து சிறிது நேரம் ஆரவைத்து வெதுவெதுப்பான சூட்டில் காலை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு கொடுக்கவேண்டும்.
 
வேப்பிலை நீரை வாரத்திற்கு ஒரு முறை குடிப்பது நல்லது. இதனால் ரத்தம் சுத்தமாகும். காயம் உள்ள இடத்தில் அந்த நீரைக் கொண்டு  கழுவி வந்தால் காயம் ஆறிவிடும். 
 
வேப்பம் பூக்களை பச்சடி அல்லது ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். இதை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு  வந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.
வேப்பம் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு  வருபவர்களுக்கு பல்வலி, பல் பிரச்சினைகள் வராது. வேப்பிலையின் பல்துலக்கும்போது சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
 
கோடைகாலத்தில் வேர்க்குரு, அரிப்பு, படை போன்ற வகையான நோய்களுக்கு வேப்பிலை மற்றும் அதன் பூக்கள் ஆகியவற்றை அரைத்து  வாரத்திற்கு ஒரு முறை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் தோல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.