இனி பள்ளிகளுக்கு என்னென்ன வேண்டும் என்பதை பெற்றோர்களே முடிவு செய்வார்கள்.. அதிரடி மாற்றம்...
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2026-28 ஆண்டுக்கான புதிய பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியிலும் நிர்வாகத்திலும் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களின் பங்களிப்பையும் உறுதி செய்யும் நோக்கில் இந்தக் குழுக்கள் சட்டப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்றன.
2024-26-ஆம் ஆண்டுக்கான பழைய குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது 2026-28-ஆம் ஆண்டுக்கான புதிய குழு பொறுப்பேற்றுள்ளது. இதன் முதல் கூட்டம் டிசம்பர் 4-ஆம் தேதி மதியம் 3.00 மணி முதல் 4.30 மணி வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பள்ளியின் அடிப்படைத் தேவைகளான வகுப்பறைக் கட்டிடங்கள், கழிப்பறை வசதி, குடிநீர் மற்றும் பாடப்புத்தகங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், மாணவர்களின் வருகைப் பதிவு, கற்றல் திறன் மேம்பாடு மற்றும் அரசு ஒதுக்கும் நிதியை எவ்வாறு பயனுள்ள வகையில் செலவிடுவது என்பது குறித்தும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.
முந்தைய குழுவின் செயல்பாடுகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகளை ஆய்வு செய்து, பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கான முதல் படியாக இந்தக் கூட்டம் அமைகிறது.

