பற்களை அழகுப்படுத்த சென்ற இளைஞர் உயிரிழப்பு
பற்கள் அழகாக இருக்க வேண்டும் என சிகிச்சை மேற்கொள்ளச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் திருமணம் என்பது ஆடம்பரமாகவும் அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் பல லட்சம், கோடிகளை செலவழித்து வசதியான பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைக்கின்றனர். வசதி இல்லாதோர் தங்கள் வசதிக்கேற்றபடி திருமணம் செய்கின்றனர்.
இந்த நிலையில் திருமணத்தின் போது, திருமணம் நிச்சயதார்த்தத்தின்போது, மணமக்கள் அலங்காரம் செய்து அழகுப்படுத்திக் கொள்வர்.
ஆனால், திருமணத்திற்காக பற்களை அழகுப்படுத்த சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில், அடுத்த மாதம் நடக்கவிருந்த திருமணத்திற்காகத் தன் பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட லட்சுமி நாராயணா(28) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும்போது, நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரது தந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் அனஸ்தீஷியா மருந்து அளித்ததால்தான் மகன் உயிரிழந்ததாக, அந்த மருத்துவமனையின் மீது இளைளைஞரின் தந்தை புகார் அளித்துள்ளார்.
பற்கள் அழகாக இருக்க வேண்டும் என சிகிச்சை மேற்கொள்ளச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.