வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (17:51 IST)

நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கிறார் ஆஸ்திரேலியா பிரதமர்..!!

australia pm
தனது நீண்ட நாள் காதலி ஜோடீ ஹெய்டனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீசி தெரிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக அந்தோணி அல்பானீஸ் பதவி வகித்து வருகிறார். அவருக்கு வயது 60. கடந்த 2019ல் ஆஸ்திரேலியாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அந்தோணி, 2022ல் ஆஸ்திரேலிய பிரதமராக பதவி ஏற்றார்.
 
இவர், 45 வயதாகும் ஜோடீ ஹெய்டன் என்ற பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இந்நிலையில் ஜோடீ ஹெய்டனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீசி தெரிவித்துள்ளார்.


நீண்ட ஆலோசனைக்கு பிறகு இதற்கு தயாரானதாகவும், எப்பொழுது, எங்கே திருமணம் எனும் விவரங்கள் குறித்து இருவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்றும் சமூக வலைதளங்களில் இருவரும் பதிவிட்டுள்ளனர்.